search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசாளர் கைது"

    • போலி பில் மூலம் கணக்கு காட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

     கோவை:

    கோவை உப்புக்கிணறு சந்து பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள பேக்கரியில் மேலாளராக உள்ளார். அவர் ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-

    பேக்கரியில் திருச்சி வையம்பட்டி காமா ட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (42) என்பவர் கடந்த 6-6-2021 முதல் 24-4-2022 வரை காசாளராக வேலை பார்த்து வந்தார். அந்த கால கட்டத்தில் பேக்கரி கணக்குகளை ஆய்வு செய்தபோது, அவர் போலி பில் மூலம் கணக்கு காட்டி ரூ.7 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவரிடம் பணம் குறித்து கேட்டபோது, பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.

    ஆனால், அவர் பணம் தராமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே, ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட காசாளர் மணிகண்டன் மீது நடவடி க்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனுவில் தெரிவித் திருந்தார். அதன்பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப ்பதிவு செய்து ஏமாற்றுதல் பிரிவில் வழக்குப ்பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவையில் பிரபல ஜவுளிக்கடையில் ரூ.5 லட்சத்தை திருடிய காசாளரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவை ஒப்பணக்கார வீதியில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடையில் தேனியை சேர்ந்த பாண்டியராஜ் (வயது30) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 1½ வருடங்களாக கடையில் வேலைபார்த்து வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காசாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    சம்பவத்தன்று இவர் 4-வது மாடியில் பணியில் இருந்த போது ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்தை திருடி உள்ளார். கடைஅதிகாரிகள் கணக்கை சரிபார்த்த போது பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் பாண்டியராஜையும் காணவில்லை.

    இதுகுறித்து கடை மேலாளர் சிவகுமார் பெரியகடை வீதி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டுபணம் முழுவதையும் பறிமுதல் செய்தனர்.
    வங்கியில் ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக காசாளரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 51). இவர் விக்கிரமங்கலம் கனரா வங்கி கிளையில் காசாளராக உள்ளார்.

    இந்த நிலையில் அவர் சக ஊழியர் நிரஞ்சனிடம் 169 எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுள்ளார். அப்போது நிரஞ்சன் வங்கி பதிவேட்டில் 69 நோட்டுகள் என்று தவறுதலாக பதிவிட்டு உள்ளார்.

    இதனை அறிந்த குமரேசன் கணக்கில் வராத ரூ.2 லட்சத்தை பேக்கில் மறைத்து வைத்துக் கொண்டார்.

    இதற்கிடையே வங்கி ஊழியர்கள் சி.சி.டி.வி.யில் பார்த்தபோது குமரேசன் ரூ.2 லட்சம் பணத்தை எடுத்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக கனரா வங்கி மேலாளர் சிவபாத நேசன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து காசாளர் குமரேசனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×